தனுஷ்- ஐஸ்வர்யா பிரிய இதுதான் உண்மையான காரணம்? ரகசியத்தை உடைத்த நண்பர்

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிய இதுதான் உண்மையான காரணம்? ரகசியத்தை உடைத்த நண்பர்

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையான காரணம் குறித்து அவர்களுக்கு நெருக்கமான பிரபல நடிகர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணமாக இது தான் இருக்கும் என பல கருத்துக்கள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றது. இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் நெருக்கமான நண்பராக இருக்கும் நடிகர் இது குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், தனுஷுக்கு தனது பணியை செய்வது மிகவும் பிடிக்கும். அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதால் அதிக பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இது அவர் குடும்ப வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் தனுஷ் புதுப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். அப்படியாவது கவனத்தை திசை திருப்புவார். இதுவும் பிரச்சனை பெரிதாக காரணம். தனுஷ் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பேச மாட்டார். அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாது.

தனது நெருங்கிய நண்பர்களிடம் கூட அது தொடர்பில் பேச மாட்டார் தனுஷ். இருவரும் பிரிந்து விட வேண்டும் என்ற எண்ணம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மனதில் சில காலமாக இருந்தது.

விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிடும் முன்பு தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து உட்கார்ந்து பேசி முடிவெடுத்தார்கள். அத்ரங்கி ரே பட விளம்பரம் முடிந்த பிறகு விவாகரத்து குறித்து அறிவிக்க முடிவு செய்தார்கள்.

அத்ரங்கி ரே பட விளம்பரங்களின்போது தனுஷ் அவராகவே இல்லை. ஐஸ்வர்யாவோ உடற்பயிற்சி , யோகா, தொண்டு பணிகள் என தனக்கு பிடித்த விடயங்களில் கவனம் செலுத்தத் துவங்கினார். 

ஐஸ்வர்யாவுக்கு தன் மகன்கள் யாத்ரா, லிங்கா மீதே முழு அக்கறையும், கவனமும் இருந்தது. இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டதால், இந்த பிரிவு செய்தியை அவர்களுக்குத் தெரிவிப்பதும் முக்கியம் என அவர் கூறியுள்ளார்.