மத வழிபாட்டுத் தலங்களில் கடமை புரிவோருக்கு இலவச மருத்துவ முகாம்

மத வழிபாட்டுத் தலங்களில் கடமை புரிவோருக்கு இலவச மருத்துவ முகாம்

வட மாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் மத வழிபாட்டுத் தலங்களில் ஈடுபடுவோருக்கான இலவச மருத்துவ முகாம் வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.

பிரதம செயலாளர் எஸ்.எம். பந்துலசேன, கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன், பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம், வடமாகாண வருவாய் திணைக்கள ஆணையாளர், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வைத்தியர் நிக்சன், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாலமுரளி ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.