கந்தகாடு விவகாரம்: அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை நிறைவு- சவேந்திர சில்வா

கந்தகாடு விவகாரம்: அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை நிறைவு- சவேந்திர சில்வா

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலுள்ள கைதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தொடர்பினை வைத்திருந்த அனைவருக்கும் முன்னெடுக்கப்பட்டிருந்த பீ.சி.ஆர் பரிசோதனை நடடிவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

கந்தகாடு விவகாரம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கந்தகாடு விவகாரங்களில் தொடர்புபட்டுள்ள அனைவரினது பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகள் நேற்று முதல் கிடைக்கப்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஊடாக மாத்திரம் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 444 கைதிகளும் 64 பணிக்குழாமினரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.