
இது தேவையா? ஓடும் ரயிலில் ஆணும், பெண்ணும் செய்த மோசமான காரியம்! பரபரப்பை ஏற்படுத்திய காட்சி
ஓடும் மின்சார ரயிலில் பள்ளி மாணவருடன் சேர்ந்து மாணவி ஒருவரும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி குறித்த மாணவரும், மாணவியும் செல்கிறனர்.
முதலில் இருவரும் ரயிலை பிடித்தபடி வேகமாக ஓடிவருகின்றனர்.
பின்னர் அந்த மாணவி ரயிலில் ஏறியதும் படிக்கட்டில் நின்றுகொண்டு தனது கால்களை வெளியே நீட்டி, பிளாட்பாரத்தை தனது கால்கள் தேய்த்தபடியே பயணம் செய்கிறார்.
இதனை தொடர்ந்து அந்த மாணவனும் அதேபோல் தனது கால்களை வெளியே நீட்டி மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனை பார்த்த பலரும் இருவரையும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
திருவள்ளூர் கவரப்பேட்டையில் மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவி விபரீதமாக பயணம் செய்யும் காட்சி பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது@Anbil_Mahesh @GMSRailway @RPF_INDIA pic.twitter.com/OxcEy2Ub0k
— Vijay (@vijay_journo) November 25, 2021