இலங்கை அணியின் முதல் இன்னிங்க்ஸ் நிறைவு!

இலங்கை அணியின் முதல் இன்னிங்க்ஸ் நிறைவு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, தனது முதல் இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனையடுத்து, இன்று தனது இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி சற்றுமுன்னர் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

தனஞ்சய டி சில்வா 65 ஒட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 56 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தினேஷ் சந்திமால் 45 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ரோஸ்டன் சேஸ் 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.