மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் கிலோவொன்றின் விலை 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், விசேட பொருளாதார மையங்களிலும், கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

அதனால் மரக்கறிகளின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளதாக, சில்லறை மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.