தேயிலை செய்கையினை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இலவச தேயிலைக் கன்றுகள்
தேயிலை செய்கையினை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு, அடுத்த வருடம் முதல் தேயிலைக் கன்றுகளை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகப் பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறையில் தேயிலையை பயிரிடுவதற்கு, தேயிலை செய்கையாளர்கள் முன்வருவார்களாயின், எதிர்வரும் 3 வருடங்களுக்குள் தேயிலை தொழிற்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையில் தேயிலை செடிகளிலிருந்து பயன்பெறுவதற்கு மூன்றரை முதல் 4 வருடங்கள் வரை செல்கின்றன.
இதனால் தேயிலை செய்கையாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டு புதிய நடைமுறையில் தேயிலை செய்கையினை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.