2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

அத்துருகிரிய பிரதேசத்தில் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சுற்றிவளைப்பின்போது, 2 கிலோ 115 கிராம் கேரள கஞ்சாவும், தராசு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹபரகட பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (27) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அது்துருகிரிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.