
பேருந்து வீதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைக்கான வீதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சஷி வெல்கம இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தத் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல், மாகாணங்களுக்கு இடையில் தொடருந்து மற்றும் பேருந்துச் சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.