கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படையினரில் பலர் குணமடைந்தனர் – 9 பேர் மாத்திரமே வைத்தியசாலையில்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படையினரில் பலர் குணமடைந்தனர் – 9 பேர் மாத்திரமே வைத்தியசாலையில்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 3 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலையை விட்டு வௌியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான  899 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படையினரில் மேலும் 9 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.