விவசாயிகள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிதறடிக்க மாட்டேன் - ஜனாதிபதி

விவசாயிகள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிதறடிக்க மாட்டேன் - ஜனாதிபதி

தாம் விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கியதாகவும் அவர்கள் தம்மீது கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதறடிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உடுபந்தாவ பகுதிக்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே தமது எதிர்பார்ப்பாகும்.

அதற்காக, அரசியல் தலைவர்கள் எடுக்காத கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளத் தாம் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சேதன பசளையைப் பயன்படுத்திப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.