நாளை முதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்

நாளை முதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்

மாகாணங்களுக்குள் மாத்திரம் நாளை (25) முதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 133 தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் நாளை (25) முதல் தொடருந்துகளில் பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.