புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

வவுனியாவில் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் பாடசாலைகளின் அனைத்து சாவிகளையும் வலயக் கல்விப் பணிமனையில் ஒப்படைக்குமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக 85 பாடசாலைகளை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அதிபர், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் பல பாடசாலைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் மாணவர்கள் பாடசாலைகளுக்குள் செல்ல முடியாது திரும்பிச் சென்றிருந்தனர். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகளை புறக்கணிக்கும் அதிபர்கள் உங்கள் வசமுள்ள பாடசாலைகளின் சாவிகளை வலயக்கல்விப் பணிமனையில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்ளேறன்.

இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடனும் பேசியிருக்கின்றேன். ஏற்கனவே எமது மாவட்டத்தின் கல்வி பாரிய வீழ்ச்சியை கண்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் புறக்கணிப்பு மிகவும் வேதனையாக இருக்கின்றது.

எனவே, உங்களிடம் உள்ள பாடசாலையின் அனைத்து சாவிகளையும் கல்விப் பணிமனையில் உடனடியாக ஒப்படைக்கவும் எனத் தெரிவித்தார்