
ஜனாதிபதியை சந்தித்த யொஹானி
´மெனிகே மகே ஹிதே´ பாடலின் ஊடாக சர்வதேச அளவில் பிரசித்தமான பாடகி யொஹானி த சில்வா இன்று (18) ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி இல்லத்தில் வைத்து அவர், ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியின் முன்னிலையில் அவர் ´மெனிகே மகே ஹிதே´ பாடல் உட்பட சில பாடல்களை பாடி காண்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.