முத்துராஜவெல சரணாலயத்துக்கு அருகில் இடம்பெறும் நிர்மாணங்கள் தொடர்பில் விசாரணை

முத்துராஜவெல சரணாலயத்துக்கு அருகில் இடம்பெறும் நிர்மாணங்கள் தொடர்பில் விசாரணை

முத்துராஜவெல சரணாலயத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் நிர்மாணங்களை பரிசோதிப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் வனவிலங்கு அமைச்சின் விசாரணை குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

முத்துராஜவெல சரணாலயத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப்பணிகள் தொடர்பான சட்டத்தன்மை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆராயுமாறு இந்தக் குழுக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.