சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு: ரோகித் சர்மா இல்லை
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்படும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். 2021 சீசனின் 2-வது பகுதி ஆட்டங்களுக்கான தொடர் இன்று தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அதனால் பொல்லார்டு கேப்டனாக செயல்படுகிறார்.
முன்னதாக, 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது.