இரண்டாவது நாளாகவும் அனைத்து பொருளாதார மையங்களும் திறப்பு

இரண்டாவது நாளாகவும் அனைத்து பொருளாதார மையங்களும் திறப்பு

நாட்டின் அனைத்து பொருளாதார மையங்களும், மொத்த விற்பனைக்காக இன்று இரண்டாவது நாளாகவும் திதிறப்புறக்கப்பட்டுள்ளது.

எனினும், மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்காக, போதுமான அளவு கொள்வனவாளர்கள் வருகைத்தரவில்லை என பொருளாதார மையங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, பெருமளவான மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மெனிங் சந்தையில் கரட் ஒரு கிலோகிராமின் மொத்த விலை 100 ரூபாவாக காணப்படுகிறது.

ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு மற்றும் லீக்ஸ் ஆகியவற்றின் மொத்த விலை 180 ரூபாவாகவும், கோவா கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை 120 ரூபாவாகவும் உள்ளது.

இதேநேரம், தம்புள்ளை உள்ளிட்ட ஏனைய பொருளாதார மையங்களிலும், மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.