தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ள பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள அனைத்து தேர்தல் பிரசார பேரணிகளையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 13, 14, 15 ஆம் திகதிகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கும் மக்கள் சந்திப்புகள் அனைத்தும் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு மேலதிகமாக பொதுத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பொதுக்கூட்டங்கள் மற்றும் சிறிய ஒன்றுகூடல்களையும் மட்டுப்படுத்துமாறும் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், சிறிய ஒன்றுகூடல்களை நடத்தப்படுமாயின் அதில் சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.