மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவம் ஆரம்பம்
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) விசேட பூஜைகள் நடைபெற்று, கொடிச்சீலைக்கு விசேட பூஜைகளும் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.
குறித்த விசேட பூஜைகளை தொடர்ந்து வேத, தாள, அரோகரா கோசங்கள் முழங்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களினால் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 10தினங்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 19ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 20ஆம் திகதி ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது