
ஹோமாகம வைத்தியசாலையில் 7 வைத்தியர்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 7 வைத்தியர்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஜனித ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தொற்றாளர்களுக்கு இடையில் 8 தாதியர்களும், 6 வைத்தியசாலை ஊழியர்களும் மற்றும் எழுத்தாளர்கள் மூன்று பேரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் 4 வைத்தியர்களும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
தொற்றாளர்களில் இருவர் மாத்திரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதாகவும் ஏனைய அனைவரும் அவர்களில் வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.