இவ்வருடத்தில் வெப்பமான மாதமாக ஜூலை பதிவு

இவ்வருடத்தில் வெப்பமான மாதமாக ஜூலை பதிவு

உலகில் இதுவரையான காலப்பகுதியில் கடந்த ஜூலை மாதமே அதிக வெப்பமான மாதம் என அமெரிக்க மத்திய அறிவியல் மற்றும் ஒழுங்குமுறை மையம் அறிவித்துள்ளது

நிலம் மற்றும் கடல்சார் பரப்பின் ஒருங்கிணைந்த வெப்பநிலை 20ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்ப நிலையான 15.8 பாகை செல்சியஸை விடவும் 0.93 பாகை செல்சியஸ் அதிகமாக காணப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச ரீதியில் கடந்த 142 ஆண்டுகளாக உலகின் வெப்பநிலை தொடர்பான தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன.

இதன்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளது.