ஹிசாலினியின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிப்பு

ஹிசாலினியின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயதுடைய ஹிசாலினியின் சடலம் இன்று (13) குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மரண பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது சடலம் இவ்வாறு பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரது பெற்றோர் மற்றும் சகோதரன் பேராதெனிய வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் சடலம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.