மஹரகம நகர சபையின் ஒரு பகுதி மூடப்பட்டது

மஹரகம நகர சபையின் ஒரு பகுதி மூடப்பட்டது

கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் மஹரகம நகரசபையின் கட்டிட பிரிவு மற்றும் அபிவிருத்தி பிரிவு என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நகர சபை உறுப்பினர், பொறியியலாளர் ஒருவர் உட்பட 6 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மஹரகம நகர சபையின் மாதாந்த நிதி ஆலோசனை கூட்டமும் பிற்போடப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மஹரகம நகர சபையின் உறுப்பினர்கள் 5 பேர் உட்பட பணியாளர்கள் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது