
கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகத்தடை
கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளைய தினம் 9 மணிநேர நீரிவிநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை முற்பகல் 9 மணிமுதல் மாலை 6 மணிவரையில் இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒருகொடவத்த - அம்பத்தல வீதியில் முன்னெடுக்கப்படுகின்ற திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.