இன்று முதல் விசேட நடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம்

இன்று முதல் விசேட நடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம்

கொழும்பு முகத்துவாரம் மிஹிஜய செவன, ரன்திய உயன சனசமூக நிலையத்திலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்தில் கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இவ்வாறு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இராணுவத்தினரால் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாணத்தில் உள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் பலவீனமானவர்களின் நலன் கருதி இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

முதற்கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் 1906 அல்லது 011 28 60 002 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முற்பதிவு செய்வதன் ஊடாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, பதுளை, கிளிநொச்சி, அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையங்கள் பலவற்றில் இராணுவத்தினரால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்று முதல் விசேட நடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம்