ஓய்வூதிய திணைக்களத்துக்கு வரவேண்டாம் என அறிவித்தல்

ஓய்வூதிய திணைக்களத்துக்கு வரவேண்டாம் என அறிவித்தல்

நாட்டில் நிலவும் கொவிட் பரவல் காரணமாக ஓய்வூதியத் திணைக்களத்திற்கு ஓய்வூதியம் பெறுவோர் வருகை தருவதனை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மறு அறிவித்தல் வரை ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருகை தர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1970 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் குறித்த திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.