முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு!

முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு!

இரவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணிகளாக ஏறும் நபர்கள் குற்றவாளிகளாக இருக்கலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டியில் ஏறிய இருவரால் முச்சக்கரவண்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

முச்சக்கர வண்டியின் சாரதிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு கூறப்பட்ட பின், அந்த இடத்திற்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், கடத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் நபர் ஒருவரையும் அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் 28 வயதுடைய நிட்டம்புவ, ருக்கஹவில பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.