பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேருக்கு கொவிட்

பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேருக்கு கொவிட்

பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 50 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

பசறை - மெதவெலகம பகுதியில் 141 பேருக்கு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையிலேயே குறித்த 40 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், பசறை பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் மேலும் 10 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதாக பசறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.