இலங்கையில் சூரியனைச் சுற்றித் தோன்றிய ஒளிவட்டம் தொடர்பில் விளக்கம்!

இலங்கையில் சூரியனைச் சுற்றித் தோன்றிய ஒளிவட்டம் தொடர்பில் விளக்கம்!

இலங்கையின் பல இடங்களில் இன்று பகல் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஒன்று தென்பட்டதாக எமது செய்திப் பிரிவுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

குறிப்பாக மத்துகம பகுதியில் நண்பகல் வேளையில் சூரியனைச் சுற்றி இவ்வாறான வட்ட வடிவான ஒளி காட்சி தென்பட்டதாக மக்கள் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக ஆத்தர் சீ க்ளார்க் மையத்தின் நட்சத்திரவியலாளர் ஜனக அடசூரியவை தொடர்பு கொண்டு வினவினோம்.

இதற்கு பதில் வழங்கிய அவர் இது சாதாரணமாக இடம்பெறும் நிகழ்வு என்றும், இதற்கு 'சூரிய மண்டலம்' என்று பெயர் எனவும் குறிப்பிட்டார்.

இரவு வேளையில் சந்திரனைச் சுற்றித் தெரியும் ஒளி வட்டம் சந்திர மண்டலம் என்று சொல்லப்படுவதைப் போல, பகல் பொழுதில் சூரியனைச் சுற்றித் தென்படும் இந்த ஒளிவட்டம் சூரிய மண்டலம் என்று சொல்லப்படும்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் விளைவாக உயர் வளிமண்டலத்தில் மிகக்குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இதனால் அங்குள்ள நீர் சிரிய பணித்துகழ்களாக மறுவி, சூரிய ஒளியை இவ்வாறு திரிபடைய செய்து வெளிப்படுத்துகிறது என்று அவர் விளக்கமளித்தார்.