வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி

வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி

இலங்கைக்கு வரும் விமானத்தில் அழைத்து வரக்கூடிய தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி 14 நாட்களை கடந்த பயணிகளை விமானத்தின் ஆசன அளவிற்கு ஏற்ப இலங்கைக்கு அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தடுப்பூசியின் ஒரு டோஸை செலுத்திக் கொண்ட மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பயணிகளை அழைத்து வரும் விமானத்தில் 75 பேர் மாத்திரமே இருக்க வேண்டும் எனவும் அவர்கள் இலங்கை வருகை தந்த பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.