நேற்று அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில்!

நேற்று அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில்!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 1,940 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் 596 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறையில் மாவட்டத்தில் 382 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 122 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

அத்துடன் அம்பாறையில் 117 பேருக்கும், காலியில் 115 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 97 பேருக்கும், மொனராகலையில் 78 பேருக்கும், பதுளை மற்றும் மட்டக்களப்பில் தலா 70 பேருக்கும், இரத்தினபுரியில் 50 பேருக்கும், பொலன்னறுவையில் 39 பேருக்கும், மாத்தறையில் 24 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் 8 பேருக்கும், கிளிநொச்சியில் 2 பேருக்கும், திருகோணமலையில் 13 பேருக்கும், மாத்தளையில் 18 பேருக்கும், வவுனியாவில் 12 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்திய பணிக்குழாமைச் சேர்ந்த பெரும்பலானவர்கள் தற்போது கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் வைத்தியர் சமன்த ஆனந்த இதனை தெரிவித்துள்ளார்.