கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்!

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்!

இலங்கையை பொருத்தமட்டில் அண்மைய தரவுகளின்படி தடுப்பூசி செலுத்தாதவர்களே கொவிட் தொற்றினால் 
உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன இததனை தெரிவித்துள்ளார்.

முதலாவது கொவிட்-19 அலையால் நாட்டில் 13 கொவிட்-19 மரணங்கள் மாத்திரமே பதிவாகியிருந்தன.

இரண்டாவது அலையில் 591 கொவிட்-19 மரணங்களே சம்பவித்திருந்தன.

எனினும், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான கொவிட்-19 மூன்றாவது அலையில் மாத்திரம் 3,450 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே இதனூடாக கொவிட் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.