இம்மாதத்தில் மாத்திரம் 397 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

இம்மாதத்தில் மாத்திரம் 397 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 397 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 10ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே அது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.