அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள் இன்று..!

அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள் இன்று..!

இலங்கையில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டது இன்றைய தினம் ஆகும்.

இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 296 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் 283 பேர் கந்தகாடு மத்திய நிலையத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 13 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2450 ஆக அதிகரித்துள்ளது.