நாட்டில் நேற்று 94,291 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

நாட்டில் நேற்று 94,291 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

நாட்டில் நேற்று 94,291 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 71,674 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 10,816 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை 1,713 பேருக்கு ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10,088 பேருக்கு மொடெர்னா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.