கொரோனாவுக்கு இலக்காகும் தமிழக அமைச்சர்கள்: மற்றொரு அமைச்சருக்கும் தொற்று உறுதி!

கொரோனாவுக்கு இலக்காகும் தமிழக அமைச்சர்கள்: மற்றொரு அமைச்சருக்கும் தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் தமிழக அரசியல் அரங்கிலும் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செல்லூர் ராஜூ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

அமைச்சரின் மனைவி ஜெயந்திக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இப்போது செல்லூர் ராஜூவுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.