230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

276 உதவி காவல்துறை அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 230 பிரதான காவல்துறை பரிசோதகர்கள், உதவி காவல்துறை அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.