இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிப்பு
சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ள 25 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 இலங்கை அணிகளின் தலைவராக தசுன் ஷானக்கவும், உபத் தலைவராக தனஞ்சய டி சில்வாவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேரா உபாதைக்கு உள்ளாகியுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான முழு தொடரிலும் இருந்து விலகியுள்ளார்.
அவ்வாறே வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ உபாதை காரணமாக இந்தியாவுடனான ஒருநாள் தொடரிலிருந்து மாத்திரம் விலகியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளை மறுதினம் (18) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.