
வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் பலி
தனது அக்காவை ஆடைத் தொழிற்சாலையில் விட்டு விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்த சகோதர் மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயதுடைய தரிந்து வீரசிங்க என்ற நாவலபிட்டி, வேவேகம பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது