கல்கிசை சிறுமி விவகாரம்: இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட இருவர் கைது!

கல்கிசை சிறுமி விவகாரம்: இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட இருவர் கைது!

கல்கிசையில் 15 வயதான சிறுமி ஒருவர் இணையத்தளம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களில் இலங்கையின் முக்கிய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரும் அடங்குவதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.