நாட்டில் மேலும் 581 பேருக்கு கொவிட்
நாட்டில் இன்று மேலும் 581 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 266, 211 ஆக உயர்வடைந்துள்ளது.
அவ்வாறே, கொவிட் தொற்றில் இருந்து இன்று மேலும் 1,625 பேர் குணமடைந்தனர். இதன்படி இதுவரையில் 234, 942 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் தற்போது 28,001 தொற்றாளர்கள் மாத்திரமே சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.