ஒரு கோடி ரூபா பெறுமதியான சிகரெட் மற்றும் மதுபான போத்தல்கள் பறிமுதல்

ஒரு கோடி ரூபா பெறுமதியான சிகரெட் மற்றும் மதுபான போத்தல்கள் பறிமுதல்

தீர்வை வரி செலுத்தாது நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட் மற்றும் மதுபான போத்தல்களை வைத்திருந்த ஒருவரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விமான படையின் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு, தளுபொத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஒரு கோடி ரூபா பெறுமதியான சிகரெட் மற்றும் மதுபான போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தளுபொத்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.