சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்பட்ட 337 பேருக்கு எச்சரிக்கை

சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்பட்ட 337 பேருக்கு எச்சரிக்கை

மேல் மாகாணத்தில், சுகாதார விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த சூதாட்ட விடுதிகள், இரவுநேர களியாட்ட விடுதிகள், பந்தைய மையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட 1,306 இடங்கள் நேற்றைய தினம் சோதனை செய்யப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுகாதார வழிகாட்டல்களை மீறி திறக்கப்பட்ட 200 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டதுடன் 337 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.