களனி கங்கையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

களனி கங்கையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு - நவகமுவ பகுதியில் களனி கங்கையில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.