பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே நிறைவேற்ற முடியாமற் போனவற்றை ஒரே முறையில் பூர்த்தி செய்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினம் மேல் மாகாணத்தில் சுமார் 799 வீதி தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் 8000 பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைவாக நிறுவனங்கள் செயல்படுகின்றதா என்பதை கண்டறிவதில் கொழும்பிலும் அதனையடுத்துள்ள பிரதேசங்களிலும் ட்ரோன் கெமராக்கள் பயன்படுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.