எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்ட சூழல் பாதிப்பை ஆராயும் நிபுணர் குழு
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் நாட்டின் கடல் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக நாட்டுக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிபுணர்கள், இன்று முற்பகல் முதல் குறித்த கப்பலை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளும் இந்தப் பணிகளின் இணைந்துள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த நிபுணர்கள் உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.