கிரான்குளம் கடற்கரையில் 3 ஆமைகளும் டொல்பினும் இறந்த நிலையில் கரையொதுங்கின!
மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை பகுதியில் உயிரிழந்த 3 கடல் ஆமைகளின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன.
அத்துடன் டொல்பின் ஒன்றின் உடலும் கரையொதுங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டமையை அடுத்து உயிரிழந்த நிலையில் பல ஆமைகளின் உடல்கள் கடந்த நாட்களில் கரையொதுங்கின.
இந்தநிலையில் ஆமைகளின் உடல் மாதிரிகளை பரிசோதனைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பவுள்ளதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



