கொழும்பு - சிலாபம் வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவுறுத்தல்!

கொழும்பு - சிலாபம் வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் கொழும்பு - சிலாபம் பிரதான வீதி மஹாவெவ பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் அந்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.