
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும்!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றிரவும் மேலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழைப் பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைப் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைப்பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலையின் போது, ஏற்பட்டக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னலால் நிகழக்கூடிய விபத்துகளை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.