நாட்டின் மொத்த கொவிட் மரணங்களில் 54% மானவை கடந்த மே மாதத்திலேயே பதிவாகியுள்ளன!

நாட்டின் மொத்த கொவிட் மரணங்களில் 54% மானவை கடந்த மே மாதத்திலேயே பதிவாகியுள்ளன!

கொவிட்-19 தொற்றுறுதியாகி மரணித்தவர்களில், 84 சதவீதமானோர் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர், விசேட வைத்தியர் செனால் பெர்னாண்டோ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில், கொவிட்-19 பரவல் ஏற்பட்டது முதல், இதுவரையில் இடம்பெற்ற மரணங்களில், 54 வீத மரணங்கள் கடந்த மே மாதத்தில் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், எதிர்வரும் காலத்தில், மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், விசேட வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களில், தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகும்.

எனவே, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என விசேட வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.